பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்தக் கோரி ஓய்வூதியர்கள் பெரம்பலூரில் தர்ணா போராட்டம்

schedule
2017-04-18 | 14:35h
update
2026-06-24 | 04:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

perambalur, pensioner old pension plan calling procedure in the dharna

பெரம்பலூர் – அரியலூர் மாவட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர்கள் ப.செல்வராஜ் (பெரம்பலூர்), மணிமொழி (அரியலூர்) ஆகியோர் தலைமை வகித்தனர். பொருளாளர்கள் பி.பரமாத்மா, எ.பெரியசாமி, முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் வீ.பாலகிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

Advertisement

தர்ணா போராட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை வாபஸ் பெற்று 2004 முதல் உள்ள பழைய திட்டத்தையே செயல்படுத்த வேண்டும்,

20 முதல் 30 சதவீதம் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை கிடைக்கிறது முழுவதுமாக கிடைக்க வேண்டும்,

தர ஊதியத்தின் அடிப்படையில் மத்திய அரசின் ஓய்வூதியர்களுக்கு 1.1.2006 க்கு முன் வழங்கியது போல் தமிழக ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும்,

நகர ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சி ஓய்வூதியர்களுக்கு மருத்துவ நிதி குடும்ப பாதுகாப்பு நிதியை விஸ்தரிக்க வேண்டும் வருவாய் கிராம ஊழியர், சத்துணவு, அங்கன்வாடி முன்னாள் கிராம முன்சீப் ஊராட்சி செயலர் ஆகியோருக்கு மத்திய அரசுக்கு இணையான குறைந்த பட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.

துணைத் தலைவர் பி.ஆறுமுகம், மற்றும் செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் லாரன்ஸ் ராஜராஜன், லெட்சுமணன், எம்தங்கராஜ், என்.செல்லப்பிள்ளை, எசனை வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் எஸ்.தினகரன், நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 04:47:04
Privacy-Data & cookie usage: