பெரம்பலூர்: காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்!

schedule
2024-06-07 | 14:06h
update
2024-06-07 | 19:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: People blocked the road demanding drinking water with empty Pots!

பெரம்பலூர் அருகே உள்ள து.களத்தூர் கிராமத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதோடு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Advertisement

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் கிராமத்தில் 6 வார்டில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, ஊராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக வீட்டு இணைப்பில் குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் து.களத்தூர்- திருச்சி செல்லும் சாலையில் து.களத்தூர் ஊராட்சி அலுவலம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அளித்த உறுதியின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதனால், அப்பகுதியில் சுமார் ஒன்றரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.08.2026 - 04:59:29
Privacy-Data & cookie usage: