Perambalur: Perali auxiliary power Station at the Power termination notice

பெரம்பலூர் மாவட்டம், பேரளி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் வரும் நாளை சனிக்கிழமை (ஆக.18 ) மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் கி.மாணிக்கம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பேரளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பேரளி, மருவத்தூர், ஒதியம், பனங்கூர், கல்பாடி, குரும்பாபாளையம் ஆகிய கிராமங்களில் நாளை நாளை சனிக்கிழமை (ஆக.18 ) காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!