பெரம்பலூர்: சான்றிதழ்கள் இல்லாமல் தவித்த மாணவிகளின் மேல்படிப்பை தொடர உதவிய நிரந்தர மக்கள் நீதிமன்றம்!

schedule
2026-06-10 | 17:54h
update
2026-06-10 | 17:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Permanent Lok Adalat helps students continue higher education after being stranded without certificates!

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் இயங்கும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் இன்று 10-06-2026-ஆம் நாள் மாலை 3.00 மணிக்கு, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை (வட்டம்), மலையாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சவிதா, ஹேமமாலினி, ரீலா ஆகியோர் பெரம்பலூர் தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்த மாணவிகள் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரி படிப்பை தொடர முடியாமல் படிப்பை நிறுத்திய நிலையில், இடைநின்ற மாணவிகளின் மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், மற்றும் மாணவிகளின் கல்லூரி சான்றிதழ்கள் பெற முடியாததால், நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.

Advertisement

மனுவை விசாரணை செய்த பெரம்பலூர் நிரந்தர மக்கள் நீதிமன்றம் (பொறுப்பு) தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான முனைவர் எல்.எஸ் சத்தியமூர்த்தி உத்தரவின்படி, கல்லூரி நிர்வாகத்திற்கு அறிவிப்பு அனுப்பி வரவழைத்து, பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலளாரும் / சார்பு நீதிபதியுமாயுமான ஏ.சரண்யா மற்றும் நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினர் எஸ். காமராசு ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடத்தி, மாணவிகளுக்கு மேலும் படிப்பை தொடர உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு, நிரந்தர மக்கள் நீதிமன்றம் (பொறுப்பு) தலைவரும் / முதன்மை மாவட்ட நீதிபதியுமான முனைவர். எல்.எஸ். சத்தியமூர்த்தியால் வழங்கப்பட்டது. வக்கீல் செல்லையா, சிறுவாச்சூர் ஜோ.அழகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.06.2026 - 18:20:02
Privacy-Data & cookie usage: