பெரம்பலூர்: வீட்டு ஓனர் அனுமதியுடன் எழுதப்பட்ட தேர்தல் சுவர் விளம்பரங்களுக்கு மட்டுமே அனுமதி!

schedule
2026-04-05 | 15:29h
update
2026-04-05 | 15:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Permission granted only for election wall advertisements written with the homeowner’s consent!

குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் ந.சக்திவேல் தலைமையில் நடந்தது. அப்போது அவர் தெரிவித்ததாவது:

Advertisement

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களுக்கு 3 நாட்களுக்குள், சுவர் விளம்பரம் செய்யப்பட்ட வீட்டு உரிமையாளரின் அனுமதி கடிதத்துடன் விண்ணப்பித்து தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதி பெற வேண்டும்.

அனுமதி எண்ணுடன் எழுதப்படும் சுவர் விளம்பரங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். தவறினால் தேர்தல் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

குன்னம் வட்டாசியர் சின்னதுரை, மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.04.2026 - 04:57:57
Privacy-Data & cookie usage: