பெரம்பலூர்: ஏரி, குளம், குட்டை மற்றும் ஊரணிகள் கட்டணமின்றி மண் எடுத்துக் கொள்ள அனுமதி; கலெக்டர் தகவல்!

schedule
2026-05-24 | 13:53h
update
2026-05-24 | 13:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Permission Granted to Extract Soil Free of Cost from Lakes, Ponds, and Tanks — Collector Announces.

பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் இலவசமாக மண் எடுத்துக் கொள்ள விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வள ஆதார துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம், குட்டை மற்றும் ஊரணிகள் ஆகியவற்றில் விவசாயிகள், மண்பாண்டம் செய்வோர் மற்றும் சொந்த வீட்டுப் பயன்பாட்டிற்கு வண்டல் மண் மற்றும் களிமண் ஆகியவற்றை சம்மந்தப்பட்ட வட்டாட்சியரின் அனுமதி பெற்று கட்டணமின்றி எடுத்துச் செல்லும் வகையில் 731 எண்ணிக்கையிலான ஏரி, குளம், குட்டை மற்றும் ஊரணிகள் மாவட்ட அரசிதழ்களில் அறிவிக்கை செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, வண்டல், மண், களிமண் தேவைப்படும் விவசாயிகள், மண்பாண்டம் செய்வோர் மற்றும் பொதுமக்கள் https://www.tnesevai.tn.gov.in/Citizen/Home/Services.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, வட்டாட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பட்டியலில் உள்ள ஏரி, குளங்களிலிருந்து கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் என கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.05.2026 - 14:10:27
Privacy-Data & cookie usage: