பெரம்பலூர்: 100 ஆண்டுகள் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பாதையை மறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு!

schedule
2026-10-12 | 17:25h
update
2026-10-12 | 17:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Petition submitted to the Collector seeking action against those who blocked a pathway used by the public for 100 years.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்ககப்பட்டுள்ளதாவது:

ஆலத்தூர் கேட்டில் இருந்து செட்டிக்குளம் செல்லும் சாலையில் 3 – ஆவது கிலோ மீட்டரில் தார்ச்சாலையின் வடபுறமாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள மண் சாலையானது கடந்த 100-‌ஆண்டுகளுக்கு மேல் பொதுமக்கள் சென்று வரும் பாதையாக உள்ளது. இந்த சாலையில் உள்புறமாக சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயிகள் தங்களது வயலில் விளையும் சின்ன வெங்காயம், கடலை, மக்காச்சோளம், நெல் உள்ளிட்ட விவசாயப் பொருட்களை இந்த சாலையின் வழியாகத்தான் கொண்டு செல்கின்றனர்.

இரூர் கிராம எல்லை புல எண் -1 மற்றும் 2 ல் துவங்கும் இந்த சாலை நாட்டார்மங்கலம் கிராம எல்லையில் சென்று ஈச்சங்காடு முதல் நாட்டார்மங்கலம் செல்லும் சாலையில் சென்று சேருகிறது. மிகவும் கரடு முரடான மோசமான இந்த பாதையின் முடிவில் அருள்மிகு பச்சாயி அம்மன் கோவிலும் உள்ளது. நாட்டார்மங்கலம், ஈச்சங்காடு மருதடி செல்லும் பொதுமக்கள் விவசாயிகள், அருள்மிகு பச்சாயி அம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் இந்த சாலையில் சென்று வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இந்த பாதை கடந்த 2012- ஆம் ஆண்டு வருவாய்த்துறை ஆவணங்களில் பெரம்பலூர் கோட்டாட்சியர் அவர்கள் உத்தரவின் பேரில் முறையாக உட்பிரிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இந்த மண் சாலையை தார்ச்சாலையாக போடுவதற்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் டெண்டர் விடப்பட்டு சாலை போடும் பணி நடந்து வருகிறது. தற்போது இரூர் கிராமத்தைச் சேர்ந்த முத்து மகன் குமார் என்பவர் இந்த பாதையில் பொதுமக்கள் செல்லமுடியாதபடி பாதையை மறித்து கற்கள் வைத்து தகராறு செய்து வருகிறார். இதனால் தார்ச்சாலை அமைக்கும் பணி அந்த இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 300 மீட்டர் தூரமுள்ள பகுதியை ஒதுக்கி விட்டு தார்ச்சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சாலையை ஒதுக்காமல் முழுமையாக தார்ச்சாலை அமைத்தத்தந்து, பாதையில் கற்கள் வைத்து மறித்து தகராறு செய்து வரும் இரூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் மீது நடவடிக்கை எடுத்து இந்தப்பகுதி விவசாயிகள் மற்றும் நாட்டார்மங்கலம், ஈச்சங்காடு பொதுமக்களுக்கு வாழ வழி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அதில் தெரிவித்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.10.2026 - 17:28:42
Privacy-Data & cookie usage: