பெரம்பலூர்: நீதி மன்றத்தில் வழக்கு உள்ளதென பாதையை மறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் எஸ்.பியிடம் மனு!

schedule
2026-10-14 | 18:26h
update
2026-10-14 | 18:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Petition submitted to the Superintendent of Police seeking action against those who blocked the path, citing a pending court case.

ஈச்சங்காடு கிராம மக்கள் சார்பில் போலீஸ் எஸ்.பி லலித்குமாரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பவதாவது:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கேட்டில் இருந்து செட்டிக்குளம் செல்லும் தார் ரோட்டின் வடக்கு புறமாக இரூர் கிராம பழைய புல எண் 2, புதிய புல எண்-2/ 2A1, 2B1, 5A ஆகிய இந்த புல எண்களில் தொடங்கி நாட்டார்மங்கலம் கிராம புல எண்கள் 32,31 உள்ளிட்ட புல எண்களில் செல்லும் பாதையானது, அருள்மிகு ஸ்ரீ பச்சாயி அம்மன் கோவில், ஈச்சங்காடு, நாட்டார்மங்கலம் மற்றும் அந்த பகுதியில் உள்ள சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு சென்று வர இந்த பாதை பயன்பட்டு வருகிறது.

கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் சென்று வரும் இந்த பாதையில் இரூர் கிராமத்தைச் சேர்ந்த முத்து மகன் குமார் என்பவர் பாதையில் கற்களை வைத்து மறித்து பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இந்த பாதை கடந்த 2012- ஆம் ஆண்டு பெரம்பலூர் கோட்டாட்சியர் அவர்கள் உத்தரவின்படி உட்பிரிவு செய்யப்பட்டு இரூர் மற்றும் நாட்டார்மங்கலம் கிராம கணக்கிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கரடு முரடான மண் பாதையை தார்ச்சாலை போடுவதற்கு ஆலத்தூர் வட்டார வளரச்சி அலுவலர் அலுவலகம் மூலம் டெண்டர் விடப்பட்டு தார்ச்சாலை பணிகள் நடைபெற்று வந்ததை குமார் என்பவர் தடுத்து நிறுத்தி விட்டார். இதனால் தார்ச்சாலை அமைக்கும் பணியும் அந்த பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

Advertisement

அந்த பகுதியில் உள்ள மின்சார கம்பத்தில் குமார் என்பவர் ஒரு பதாகை (பிளக்ஸ்) வைத்துள்ளார். அந்த பதாகையில் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாகவும் MADRAS HIGH COURT WP NUMBER-101210/2026 என்றும் அந்த பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் இந்த பகுதியில் எவ்விதமான பணிகளும் நடைபெறக்கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இது போன்ற எண்ணில் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஏதும் நடைபெறவில்லை என்று தெரிய வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள், விவசாயிகளை 100 ஆண்டுகளாக சென்று வரும் பாதையை மறித்து மிரட்டல் செய்து வரும் குமார் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட எஸ்.பி. லலித்குமார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கபதாக கிராம மக்களுக்கு உறுதி அளித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.10.2026 - 19:03:20
Privacy-Data & cookie usage: