பெரம்பலூர்: சாலை வசதிக்காக, போராட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீஸ் எஸ்.பி.யிடம் மனு!

schedule
2024-06-18 | 15:17h
update
2024-06-18 | 15:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Petition to Police S.P. for permission to hold protest for road facilities!

பெரம்பலூர் அருகே உள்ள அரசடிக்காடு கிராம மக்களுக்கு சாலை வசதி கேட்டு, கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீஸ் எஸ்.பி-யிடம் மனு கொடுத்தனர்.

Advertisement

பெரம்பலூர் மாவட்ட கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை நிர்வாககள், எஸ்.பி ஷ்யாம்ளாதேவியிடம் இன்று மனு கொடுத்தனர். அதில், பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி அருகே உள்ள அரசடிக்காடு கிராமத்தை பொதுமக்களுக்கு சரியான சாலை வசதி இல்லாததால், தனியாருக்கு சொந்தமான விவசாய பட்டா நிலத்தில், சென்று வந்தூகவும் தற்பொழுது அந்த நிலத்தின் உரிமையாளர்களில் சிலர் திடீரென தங்களது பட்டா நிலத்தில் பாதைவிட முடியாது, மாற்றுப் பாதையில் செல்லுங்கள் என்று கூறி அதனை மறித்து விட்டதாகவும் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அந்த வழியாக வந்து சென்ற பள்ளி பேருந்துகள், பால் ஏற்றி செல்லும் வாகனங்கள் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளதால், அந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை வசதி ஏற்படுத்தி தராததை கண்டித்து வருகின்ற 28.ம் தேதி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.08.2026 - 08:15:16
Privacy-Data & cookie usage: