ST சமூக இளைஞர்களுக்கு மெசின் ஆப்பரேட்டர் பிளாஸ்டிக் பிராசஸ்சிங் பயிற்சி; கலெக்டர் தகவல்!
Perambalur: Plastic processing machine operator training for SC/ST youth; Collector announces!
தாட்கோ, மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள்ளும், மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சி 4 மாதங்கள் சென்னை மாவட்டத்தில் நடைபெறும். பயிற்சி காலங்களில் இளைஞர்களுக்கு உதவித் தொகையாக ஒரு மாதத்திற்கு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக வேலை வாய்ப்புக்கான வழிவகை செய்யப்படும். ஆரம்ப கால மாத ஊதியமாக சுமார் ரூ.18ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை வருவாய் ஈட்டும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம் என கலெக்டர் சரண்யா தெரிவித்துள்ளார்.