பெரம்பலூர்: நெடுவாசலில் பிளாஸ்டிக் கழிவு சேகரிக்கும் நிகழ்ச்சி; கலெக்டர் அழைப்பு!

schedule
2025-04-24 | 19:19h
update
2025-04-24 | 19:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Plastic waste collection event at Neduvasal; Collector’s call!

தமிழ்நாடு அரசு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஒழிப்பதிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலும், அரசு பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு, மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இது தொடர்பாக அரசாணை எண் (நிலை) 189 சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையினால் 01.11.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் ஒரு அங்கமாக பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் உள்ளாட்சி துறையினர், ஹோப் டிரஸ்ட் உள்ளிட்ட பல தொண்டு நிறுவனங்கள் இணைந்து 26.04.2025 அன்று காலை 7 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம், நெடுவாசல் பகுதியில் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு செய்யும் நிகழ்வு கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

Advertisement

இதில் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு நெகிழி கழிவு பொருட்களை சேகரித்தல் மற்றும் நெகிழி குறித்த விழிப்புணர்வை பெற்று தம் அன்றாட வாழ்வில் நெகிழி புறக்கணிப்பை அங்கமாக்கி நெகிழி இல்லா தமிழகத்தை முன்னெடுத்து செல்வதில் பங்காற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 02:53:10
Privacy-Data & cookie usage: