பெரம்பலூர்: நெடுவாசல் கிராமத்தில் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு பணி; கலெக்டர் இன்று தொடங்கி வைத்தார்!

schedule
2025-04-26 | 08:18h
update
2025-04-26 | 08:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Plastic waste collection work in Neduvasal village; Collector inaugurated today!

பெரம்பலூர் அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளர்ச்சி துறை மற்றும் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு பணியை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் இன்று காலை தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் பணி 2025 ஆம் ஆண்டு முழுவதும் மாதங்களின் இறுதி சனிக்கிழமைகளில் நடைமுறைப்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் நெடுவாசல் கிராமத்தில் மாபெரும் நெகிழி கழிவு சேகரிக்கும் பணியை கலெக்டரால் தொடங்கி வைக்கப்பட்டது.

Advertisement

பின்னர், கலெக்டர், ஊராட்சி தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து நெடுவாசல் பள்ளி அருகே உள்ள மட்ட குட்டையில் பிளாஸ்டிக் கழிவு குப்பைகளை சேகரித்தனர். நெடுவாசல் கிராமத்தில் அனைத்து இடங்களிலும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனித் தனியாக சேகரித்து, முழுமையாக தூய்மைப்படுத்திட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். பள்ளி அருகே உள்ள மட்ட குட்டை, அரசு பள்ளி வளாகம், மேல்நிலை நீர்தேக்க தொட்டி, அங்கன்வாடி மையம், அனைத்து வீதிகள், வாய்க்கால்கள் ஆகிய இடங்களில் தூய்மை பாரத இயக்கப் பணியாளர்கள் தன்னார்வலர்கள் மற்றும் ஊராட்சித் துறை பணியாளர்கள் அனைவரும் நெகிழி கழிவு சேகரித்து கிராமத்தை தூய்மைப்படுத்தினர்.

ஹோப் டிரஸ்ட் திட்ட இயக்னர் திவ்வா செல்வம் உள்பட 250க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், தூய்மை பாரத இயக்க பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்று, தூய்மை பணியினை மேற்கொண்டு பொதுமக்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்து வழங்குவது பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜபூபதி, பி.டிஓ. செல்வகுமார், தூய்மை பணியாளர்கள், தூய்மை பாரத இயக்க பணியாளர்கள் தன்னார்வலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தெருத்தெருவாய் கூட்டுவது பொதுநலத் தொண்டு, ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலமுண்டு – எம்.ஜி.ஆர் படபாடல் வரிகள்….!

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.06.2026 - 19:21:31
Privacy-Data & cookie usage: