கொரோனா தொற்றுக்கு பெரம்பலூர் பாமக பிரமுகர் பலி!

schedule
2020-07-19 | 07:20h
update
2020-07-19 | 07:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur PMK figure dies of corona infection

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் வேப்பூர் அருகே உள்ள ஓலைப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மகன் வெங்கடேசன்(41), ரியல் எஸ்டேட் தொழில் அதிபரான இவர், பாட்டாளி மக்கள் கட்சியின் பெரம்பலூர் நகர செயலாளராக 4 வருடமாக பதவி வகித்து வந்தார்.

Advertisement

இதனிடையே கடந்த 12ந்தேதி நோய்த்தொற்று அறிகுறியுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், மேல் சிகிச்சைக்காக கடந்த 16ந்தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உடல் நிலை மிகவும் மோசம் அடைந்ததால், கோவை சிஎஸ்ஐ.,மருத்துவமனையில் நேற்று இரவு 8 மணியளவில் அனுமதிக்கப்பட்டு 10 மணி அளவில் சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் உயிரிழந்தார்.

இவரது சடலம் மருத்துவமனை வளாகத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெங்கடேசன் உயிரிழந்த தகவல் அறிந்து அவரது குடும்பத்தார் உள்ளிட்ட உறவினர்கள், பெரம்பலூர் 4ரோடு செல்லும் சாலையில் எம்.ஜி., மருத்துவமனை அருகே உள்ள அவரது வீட்டின் முன் நோய்த்தொற்றின் தீவிரத்தை உணராமல் திரண்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே வைரஸ் தொற்றால் சித்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் உயிரிழந்து பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.05.2026 - 02:29:16
Privacy-Data & cookie usage: