பெரம்பலூர்: பணத்தை, வங்கியில் பாதுகாத்து வைத்து கொள்ள போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

schedule
2026-02-12 | 07:52h
update
2026-02-12 | 07:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Police advise the public to keep their money safe in the bank!

பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பில் விடுத்துள்ள அறிவிப்பு:
அறுவடை காலம் நடைபெற்று வருவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அறுவடையில் கிடைக்கும் பணத்தை வீட்டில் வைத்துவிட்டு வெளியூர் செல்ல வேண்டாம் என பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அறிவுறுத்துகிறது. வீடுகளில் அதிகளவில் பணம் வைத்திருப்பது திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும், எனவே அறுவடையில் கிடைக்கும் பணத்தை பாதுகாப்பாக உங்களின் வங்கி கணக்குகளில் செலுத்தி சேமித்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Advertisement

வெயில் காலம் தொடங்கவிருப்பதால் பொதுமக்கள் காற்றோட்டம் கருதி தங்களது வீட்டை திறந்து வைத்துவிட்டு உறங்க வேண்டாம். பொதுமக்கள் யாரேனும் வெளியூர்களுக்கு செல்லும்போது தங்களது வீட்டை பூட்டி சாவியை வீட்டிற்கு முன்னதாக இருக்கும் எந்த இடத்திலும் வைக்க வேண்டாம்.
வீட்டை பூட்டிவிட்டு வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களது அருகாமையிலுள்ள காவல் நிலையத்திற்கு கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும். தங்களது கிராமங்களுக்கு சந்தேகத்திற்கிடமாக புதிதாக எவரேனும் வந்தால் அவரைப் பற்றிய தகவலை அருகில் உள்ள காவல்நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலக எண்ணிற்கு 9498100690 தகவல் தெரிவிக்க வேண்டும்.

கிராமத்தின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.ஏற்கனவே பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதையும் அவ்வப்போது சரி பார்க்க வேண்டும். மேலும், சந்தேகத்துக்கிடமான நபர்கள் அல்லது செயல்பாடுகள் குறித்த தகவல்கள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்புகொள்ளுமாறும் பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2026 - 13:25:55
Privacy-Data & cookie usage: