பெரம்பலூர்: தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தவரை கைது செய்த போலீஸ்!

schedule
2025-04-24 | 03:01h
update
2025-04-24 | 03:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Police arrest man for selling banned gutka products!

பெரம்பலூர் நகர எல்லைக்கு உட்பட்ட வடக்கு மாதவி ரோடு பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருபவர் ஜெய்லானி மகன் ஷேக் அப்துல்லா (50), இவர் பெட்டி கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில் தனிப்படையினர், ஷேக் அப்துல்லாவை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து ஹான்ஸ் 98 பண்டல் (29.5 கிலோ), கூல்லீப் 180 பண்டல் ( 18 கிலோ), விமல் பாக்கு 147 பண்டல் ( 11 கிலோ), மற்றும் A1 பான் மசாலா 250 பண்டல் ( 2.5 கிலோ), என மொத்தம் 61 கிலோ எடையுள்ள சுமார் 1,39,800/-ரூபாய் மதிப்புடைய குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக்காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும், என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.06.2026 - 06:53:32
Privacy-Data & cookie usage: