பெரம்பலூர்: வழிப்பறியில் ஈடுபட்ட இருவரில் ஒருவரை கைது செய்த போலீசார்!

schedule
2025-04-28 | 17:11h
update
2025-04-28 | 17:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Police arrest one of two people involved in a robbery!

பெரம்பலூர் 4 ரோடு பகுதியை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் அவரது மனைவியை எறையூரில் உள்ள சிப்காட்டில் வேலைக்கு செல்ல இறக்கி விட்டு விட்டு, பெரம்பலூருக்கு பைக்கில் திரும்ப வந்து கொண்டிருந்தார். அப்போது தேவையூர் அருகே வந்த போது, இரு வாலிபர்கள் அண்ணாதுரையை வழிமறித்து அவரிடமிருந்த செல்போனை பறித்து சென்றனர்.

Advertisement

இது குறித்து மங்கலமேடு போலீசில் அண்ணாதுரை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டது கடலூர் மாவட்டம், திட்டக்குடியை சேர்ந்த தர்மலிங்கம் மகன் உதயகுமார், (29), இளமங்கலம் கிராமத்தை சேர்ந்த நரசிம்மன் மகன் திருப்பதி (24) என்பதும் தெரிய வந்தது. இதில், உதயகுமாரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் திருப்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.08.2026 - 07:02:21
Privacy-Data & cookie usage: