பெரம்பலூர்: லாரி டிரைவரிடம் வழிப் செய்த வாலிபரை கைது செய்து சிறைக்கு அனுப்பிய போலீசார்!

schedule
2025-04-20 | 18:59h
update
2025-04-20 | 18:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Police arrest youth who seduced lorry driver and send him to jail!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை சேர்ந்த பூபதி மகன் கோகுல் (28). லாரி டிரைவர். கடந்த ஏப்.17ம் தேதி,
மதியம் 1 மணியளவில், அரியலூரிலிருந்து அசாம் மாநிலத்திற்கு லாரியில் சரக்குடன் சென்று கொண்டிருந்தார். வழியில், பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் திருச்சியிலிருந்து சென்னை NH 38 சாலைக்கு எதிரே உள்ள SS ஹைப்பர் மார்க்கெட் அருகே தனது லாரியை நிறுத்தி உள்ளார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 பேர் அவரை அணுகி, தங்கள் மொபைல் போன் காணாமல் போனதாக பொய்யாகக் கூறி, கோகுல் என்பவரின் பையை சரிபார்க்கச் சொன்னவர்கள், சோதனை செய்யும் போது, அடையாளம் தெரியாத இருவரும் ரூ.3 ஆயிரத்துடன் அவரது மொபைல் போனையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

Advertisement

இது தொடர்பாக, கோகுல் அவசர போலீஸ் 100 க்கு தகவல் தெரிவித்தார். வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புகார்தாரரிடம் நடத்தியதுடன், அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை சரிபார்க்க ஒரு சிறப்புக் குழு அனுப்பப்பட்டது. பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும் இன்று தருமபுரி மாவட்டம் குமராசாமி பேட்டை பகுதியை சேர்ந்த மாது மகன் வினோத் (26), அடையாளம் கண்டு, தனிப்படையினர் வினோத்தை கைது செய்து, விசாரணை நடத்தியதில் வினோத் மீது பல குற்ற வழக்குகள் உள்ளது என்பது தெரிய வந்தது. அவனை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருக்கும் மற்றொருவனையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.04.2026 - 10:37:10
Privacy-Data & cookie usage: