பெரம்பலூர்: தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்தவரை கைது செய்த போலீசார்!

schedule
2024-11-10 | 17:40h
update
2024-11-10 | 17:41h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Police arrested a person who had banned Gutka!

பெரம்பலூர் மாவட்டத்தில் தனிப்படை போலீசார் வாலிகண்டபுரம் கிராமத்தில் சோதனை நடத்திய போது, கீழத் தெருலை சேர்ந்த ரமணி மகன் குமரன் (42) என்பவர் அவருக்கு,சொந்தமான மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில் தனிப்படை எஸ்.எஸ்.ஐ.க்கள் சிவக்குமார், ரமேஷ் மற்றும் காவலர்கள் வெங்கடேசன், ராஜீவ்காந்தி ஆகியோர்கள் குமரனை கைது செய்து மங்களமேடு போலீசில் ஒப்படைத்தனர்.

Advertisement

மங்களமேடு போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் மார்டின்ராஜ், குமரன்மீது Cr.No.449/24 u/s 24(1) Tobacco Act ன் படி வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து 40 ஹான்ஸ் பாக்கெட், 19 கூல் லிப் பாக்கெட், 65 பான் மசாலா பாக்கெட்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறை காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும், என போலீசார் தகவல் தெரிவித்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.08.2026 - 00:32:30
Privacy-Data & cookie usage: