கிணற்றில் இறந்து கிடந்த பெண்ணின் அடையாளம் கண்டது பெரம்பலூர் போலீஸ்!

schedule
2022-03-08 | 11:59h
update
2022-03-08 | 11:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur police have identified the woman who died in the well!

பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில், விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் நேற்று ஒரு பெண் இறந்து சடலமாக கிடப்பதாக பெரம்பலூர் போலீசார் வந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று, பெண்ணின் உடலை, தீயணைப்பு மற்றும் மீட்பு படை உதவியுடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில்,

Advertisement

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள ஆம்.எம்.கே நகரில் வசிக்கும் சுரேஷ்குமார் மனைவி அஞ்சலை (23) என்பது தெரிய வந்தது. இது அந்த பெண்ணின் கணவர் கடந்த 5ம் தேதி, தனது மனைவி காணவில்லை எனவும், கண்டுபிடித்து தரக்கோரி புகார் கொடுத்திருந்தார்.

இறந்து போன அஞ்சலைக்கு சுரேஷ்குமாருடன் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு சிவன்யா வயது 3 1/2 என்ற மகளும் ஹரிஷ் வயது 1 1/2 என்ற மகனும் உள்ளனர் சுரேஷ்குமார் தச்சு தொழில் செய்து வருகிறார். அஞ்சலைக்கு மனநிலை சரியில்லாமல் இருந்த காரணத்தினால் கடந்த 2 வருடங்களாக அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும், காணாமல் போனதற்கு கடந்த பத்து நாட்களுக்கு முன்பு அவர் சாப்பிட்டு வந்த மாத்திரைகள் தீர்ந்து போனதாலும், அதை வாங்குவதற்கு சுரேஷ்குமார் இடம் பணம் இல்லாத காரணத்தினாலும் 10 நாட்களாக மாத்திரை சாப்பிடாமல் இருந்துள்ளார். காணாமல் போன 4.3.22 ஆம் தேதி சுமார் 11.00 மணியளவில் அஞ்சலை மேற்படி கிணற்றை நோக்கி தனியாக வேகமாக நடந்து செல்லும்பொழுது அங்கு வசிக்கும் வள்ளியம்மை என்பவர் பார்த்து உள்ளார், எனவும் விசாரணையில் தெரியவந்தது.
மாத்திரை வாங்க பணம் இல்லாமல் தாய் இறந்த இந்த சம்பவத்தில் குழந்தைகள் நிலை பரிதாபமாக இருந்தது. பார்ப்போரை கலங்க வைத்தது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 15:46:16
Privacy-Data & cookie usage: