பெரம்பலூர்: புதிய பஸ் ஸ்டாண்டில் அத்துமீறி நிறுத்தப்பட்ட பைக்குகளுக்கு பூட்டு!

schedule
2025-11-12 | 19:24h
update
2025-11-13 | 14:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Police lock bikes parked illegally at the new bus stand!

Advertisement

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு பயணிகள், அதிக கட்டணமாக இருப்பதால் பைக் ஸ்டாண்டில் வண்டிகளை நிறுத்தாமல், புதிய பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே வாகனங்களை அத்துமீறி நிறுத்தி செல்கின்றனர். இது குறித்து பல முறை டிராபிக் போலீசாரும் வாகன ஓட்டிகளுக்கு பஸ் ஸ்டாண்டில் வண்டிகளை நிறுத்தக்கூடாது. அனுமதி இல்லை என அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், பைக் வைத்திருப்பவர்கள் இதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பைக்குகளை, பயணிகள் மற்றும் பஸ்களுக்கு இடையூறாக நிறுத்தி வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்களுக்கு, டிராபிக் போலீசார், நகராட்சி அலுவலர்களோடு இணைந்து சங்கிலியால் பூட்டு போட்டனர். பின்னர், வண்டிகளை தேடி வந்த வாகனஓட்டிகளுக்கு உரிய அறிவுறுத்தல் செய்ததோடு, அபராதம் விதிக்கப்படும். மீறினால் பைக்குகள் பறிமுதல் செய்யப்படும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 17:22:56
Privacy-Data & cookie usage: