பெரம்பலூர்: 2ம் நிலைக் காவலர்கள் தேர்வு எழுதுபவர்களுக்கு, காவல்துறை அறிவிப்பு!

schedule
2025-11-07 | 14:02h
update
2025-11-07 | 14:02h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Police notice for those writing the 2nd Grade police examination!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக, பெரம்பலூர் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்குரிய 2ம் நிலை காவலர்கள், 2ம் நிலை சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பதவிகளுக்கான பொது தேர்வு வருகின்ற 09.11.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று, பெரம்பலூர் மாவட்டம் துறையூர் சாலையில் அமைந்துள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழகம் வளாகத்தில் நடக்கிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 1592 தேர்வாளர்கள் இத்தேர்வினை எழுத உள்ளனர். தேர்வு நடைபெறும் நாளான 09.11.2025 அன்று காலை 8.00 மணியில் இருந்து 09.30 மணி வரை மட்டும் தேர்வு எழுதுபவர்கள் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு எழுதுபவர்களை தவிர மற்றவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

Advertisement

மேலும், தேர்வு எழுதுபவர்கள் கருப்பு நிற பந்து முனை பேனா (Ball Point Pen), தேர்வு நுழைவு சீட்டு (Hall Ticket), மற்றும் அசல் அடையாள அட்டையானா (Identity Card) ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம் முதலியவைகளில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும்.

செல்போன், கடிகாரம் மற்றும் எலக்ட்ரானிக்கல் டிவைஸ் சம்பந்தப்பட்ட எந்த பொருட்களும் தேர்வு வளாகத்திற்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை. காலை 09.30 மணிக்கு மேல் வருகை தருபவர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு வளகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தேர்வு எழுதுபவர்கள், தேர்வு முடிவுற்ற பின்னர் வருகை பதிவேட்டில் இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டியுள்ளதாலும், தேர்வாளர்களின் விவரங்களை சரிபார்த்த பிறகு தான் தேர்வு எழுதுபவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர். தேர்வு எழுதுபவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நுழைவுச்சீட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவுரைகளின்படி தேர்வு அறையில் நடந்து கொள்ள வேண்டும். தேர்வு எழுதும் தேர்வாளர்கள் அனைவருக்கும் தேர்வில் வெற்றி பெற பெரம்பலூர் மாவட்ட காவல் துறையின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என பெரம்பலூர் மாவட்ட போலீசார் விடுத்துள்ள அறிவிப்வில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.06.2026 - 21:54:32
Privacy-Data & cookie usage: