பெரம்பலூர்: பாய்பிரண்டு ரூமிற்கு சென்ற இளம்பெண் நள்ளிரவில் 100 க்கு அழைத்ததால் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்த போலீசார்!

schedule
2026-06-10 | 07:56h
update
2026-06-10 | 07:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Police rescued a young woman who had gone to her boyfriend’s room after she called ‘100’ at midnight, and handed her over to her parents.

பாய்பிரண்டை நம்பி சென்ற பெண்கள் நிலைமை தமிழ்நாடு இந்தியா அளவில் பல விபரீத சம்பங்களை ஏற்படுத்தி உள்ளன. இவர்களை கடைசியில் மீட்டு காப்பாற்றுவதும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெறவும் போலீசார் போராடி பணி செய்து வருகின்றனர். சமீப நாட்களில், கோவை, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அரங்கேறிய நிலையில் போலீசார் நடவடிக்கை எடுத்து இருந்தாலும் பாதிப்பும், மன உளைச்சலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குதான்.

Advertisement

பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்று உள்ளது. அதில், ஏராளமான வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தங்கி அருகில் உள்ள கல்லூரிகளில் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் விடுதியில் தங்கியிருந்த பாய்பிரண்டை தனிமையில் சந்திப்பதற்காக கல்லூரியில் படிக்கும் இளம்பெண் ஒருவர் பாய்பிரண்டு அறைக்கு சென்றார். அந்த அறையில் முனகல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்து அறையை சேர்ந்தவர்கள் கதவை தட்டி உள்ளே முயன்றதாக கூறப்படுகிறது. இதில் பயந்து போக இளம்பெண் அவசர 100 க்கு போன் செய்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பத்திரமாக பெண்ணை மீட்டு, வெளிமாவட்டத்தில் இருந்த பெற்றோரை வரவரழைத்து ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூரில் கல்வி நகரமாக மாறி வருவதால், வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்லூரி விடுதிகளிலும், வெளியே தனியார் விடுதி மற்றும் வீடுகளிலும் தங்கி பயின்று வருகின்றனர். ஒரு சில மாணவர்கள் இது போன்ற ஒழுக்க கேடான விசயங்களில் ஈடுபடுவதால் பிற பெற்றோர்களும், பெரம்பலூருக்கு படிக்க அனுப்பி வைக்க அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.06.2026 - 08:00:40
Privacy-Data & cookie usage: