Perambalur: Pongal festival celebrated at Anbagam Special School; organized by the Valai Karangal Association and the Atmaviyal Foundation!
பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள அன்பகம் சிறப்பு பள்ளியில் பொங்கல் விழாவை அன்பகம் நிர்வாக இயக்குனர் ஷகீலா பிவி தலைமையில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். வளைகரங்கள் சங்க தலைவி அமராவதி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து, சிறப்பாக நடனமாடிய அன்பகம் சிறப்பு பள்ளி மாணவ மாணவிகளையும் ஆசிரியர்களையும் பாராட்டினார். மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டது. வளைகரங்கள் சங்க உறுப்பினர்கள் சங்கீதா, அபிராமி, ஆன்மவியல் அறக்கட்டளை உறுப்பினர் தர்மதுரை, அன்பகம் பள்ளி ஆசிரிய ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பள்ளியில் ஆசிரியர் ராணி பரிமளா நன்றி கூறினர்.