குடும்பத் தகராறு காரணமாக நஞ்சு அருந்திய தொழிலாளி சாவு

schedule
2016-01-25 | 16:32h
update
2026-04-12 | 06:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அனுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 35), இவரது மனைவி தேவி (33), இவருக்கும் 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ஆனந்தி, ஆர்த்தி, ஆகாஸ் என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில வருடங்களாக மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜு அடிக்கடி மது போதையில் வீட்டிற்கு சென்றதால் கனவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Advertisement

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் மது அருந்தி விட்டு செல்வராஜு வீட்டிற்கு சென்றதால் கனவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த செல்வராஜு நேற்று காலை 10.30 மணியளவில் விஷம் அருந்தியதில் மயங்கினார்.

இதை அறிந்த அவரது குடும்பத்தினர் சிலர் உதவியுடன் செல்வராஜுவை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனைத் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜு இன்று காலை உயிரிழந்தார்.

இது குறித்து செல்வராஜுவின் சகோதரர் ஆறுமுகம்(40) அளித்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.04.2026 - 06:28:27
Privacy-Data & cookie usage: