பெரம்பலூர்: கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தில் பதவிகள்; கலெக்டர் அழைப்பு!

schedule
2025-12-09 | 14:18h
update
2025-12-09 | 14:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Posts in Christian Women’s Aid Society; Collector invites applications!

சிறுபான்மையினர் நலத்துறை மூலம் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் செயல்படுவது தொடர்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ   ஏழை, எளிய மிகவும் பின்தங்கிய கிறிஸ்தவ மகளிர்களுக்கு உதவிடும் வகையில் 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் நலத்திட்டங்களை சிறப்புற செயல்படுத்திட பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

மாவட்ட ஆட்சித் தலைவரை பதவி வழி தலைவராக கொண்டு செயல்படும் இச்சங்கத்திற்கு அலுவல் சாரா உறுப்பினர்களாக ஒரு கவுரவ செயலாளர், ஒரு கௌரவ இணை செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் தேவைப்படுகின்றனர். சங்கத்திற்கு சமூகப்பணிகளில் தொண்டாற்றுவதில் எவ்வித புகார்களுக்கு இடமின்றி செயல்படும், நல்ல திறன்மிக்க, ஆர்வமுள்ள கிறித்துவ சமுதாயத்தை சேர்ந்த தலைசிறந்த பிரமுகர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். விருப்பமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேற்படி விண்ணப்பங்கள் தேர்வு குழுவால் ஆய்வு செய்யப்பட்டு அலுவல் சாரா உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர் என கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2026 - 08:36:51
Privacy-Data & cookie usage: