Perambalur: Posts in the Juvenile Justice Board; Collector’s announcement!
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் நீதி குழுமத்தில் கூடுதலாக பணியாற்றிட இளநிலை உதவியாளருடன் கூடிய பதிவேடு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை தொகுப்பூதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட உள்ளது.
இளநிலை உதவியாளருடன் கூடிய பதிவேடு எழுத்தர் பணிக்கு கல்வி தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி, தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்வில் மேல்நிலை தேர்ச்சி மற்றும் கணினி இயக்கும் திறன் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 42 வயதிற்குள் மிகாமல் இருக்க வேண்டும். தொகுப்பூதியமாக ஒரு மாதத்திற்கு ரூ.20,000/- வழங்கப்படும்.
அலுவலக உதவியாளர் பணிக்கு கல்வி தகுதியாக 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். தொகுப்பூதியமாக ஒரு மாதத்திற்கு ரூ.13,000/- வழங்கப்படும்.
விண்ணப்பங்களை https://perambalur.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கல்வி தகுதிக்கான அனைத்துச் சான்றிதழ்கள், புகைப்படம் மற்றும் அனுபவ சான்றிதழ்கள் போன்றவற்றின் நகல்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை 05.10.2026அன்று மாலை 5.45 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சுபாவளாகம் எண்.106F/7 தரைத்தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, பெரம்பலூர் – 621212 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், இளநிலை உதவியாளருடன் கூடிய பதிவேடு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பணியிடங்களுக்கும் தனித் தனியே விண்ணப்பபடிவம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.