Perambalur: Poultry farmers stage protest condemning the arrest of the Tamil Nadu Farmers’ Association state president!
தமிழகம் முழுவதும் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் கிலோவுக்கு 20 ரூபாய் உயர்வு கேட்டு 13-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது கோரிக்கையை முன்வைத்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர் ஈசன் முருகசாமி, தலைமையில் தமிழக அரசுக்கு எதிராக, திருப்பூர் மாவட்டத்தில், கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்,
இதில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர் ஈசன் முருகசாமி உள்பட 11 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர், இதனை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள், ஆர்ப்பாட்டம் செய்துவரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக, பெரம்பலூர் மாவட்ட கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நலச்சங்கத்தின் சார்பில் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் ஈசன் முருகசாமி, மற்றும் விவசாயிகளை கைது செய்ததை, காவல்துறையையும், தமிழக அரசையும் கண்டித்து கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்ப பட்டத்தில் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் ஜெய்சங்கர், மாவட்ட செயலாளர் சின்னதுரை உள்பட ஏராளமான கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.