Perambalur: Power outage notice for areas receiving electricity at Esanai substation!
பெரம்பலூர் அருகே உள்ள எசனை துணை மின் நிலையத்தில் வரும் நவ.19 செவ்வாய்க் கிழமை பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அன்றைய தினம், கோனேரிப்பாளையம், சொக்கநாதபுரம், செஞ்சேரி, ஆலம்பாடி, எசனை, கீழக்கரை, பாப்பாங்கரை, இரட்டைமலை சந்து, அனுக்கூர், சோமண்டாபுதூர், வேப்பந்தட்டை, பாலையூர், குரும்பலூர் பிரிவு அலுவலத்திற்கு உட்பட்ட மேட்டாங்காடு, திருப்பெயர், கு.புதூர், மேலப்புலியூர், நாவலூர் மற்றும் காவேரி நீரேற்றம் உந்து நிலையங்களான ஆலம்பாடி, எசனை, வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் எசனை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மின் பகிர்மான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் பி.செல்வராஜ் விடுத்துள்ள அறிவிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.