பெரம்பலூர்: தனியார் கல்லூரி பஸ் டிரைவர், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிய போது, மின்சாரம் தாக்கி பரிதாப பலி!

schedule
2025-04-17 | 18:17h
update
2025-04-17 | 18:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Private college bus driver tragically dies after being electrocuted while watering plants!

பெரம்பலூர் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள கீழப்புலியூர் தெற்கு தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் ராமராஜ் (33). கடந்த 2 ஆண்டுகளாக பெரம்பலூர் அடுத்த சிறுவாச்சூரில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் கடந்த சுமார் 2 ஆண்டு பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த ஏப்.13ம் தேதி மாலை, கல்லூரி விடுமுறை நாளானதால், மாற்றுப் பணியான கல்லூரியில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணியை டேங்கர் லாரி செய்துள்ளதார். டேங்கில் நீர் உள்ளதா என பார்க்க மேலே ஏறி நின்று பார்த்த போது, அங்கு தாழ்வாக இருந்த மின்சார கம்பி மோதியதில் அவர் மீது மின்சாரம் தாக்கியது. அங்கிருந்தவர்கள் அருகிலுள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த டிரைவர் ராமராஜின் உடலைக் கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.06.2026 - 23:36:41
Privacy-Data & cookie usage: