பெரம்பலூர்: செல்போனில் பேசிக் கொண்ட டிரைவர் ஓட்டியதால் கவிழ்ந்த தனியார் கல்லூரி பஸ்!

schedule
2026-10-26 | 15:14h
update
2026-10-26 | 15:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Private college bus overturns after driver talks on mobile phone while driving!

பெரம்பலூர் அருகே செல்போன் பேசிக்கொண்டு டிரைவர் காலேஜ் பஸ்சை ஓட்டியதால் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளானதில் பத்துக்கு மேற்பட்ட மாணவர் மாணவிகள் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தில் உள்ள பெருமத்தூர், கிளியூர், கீழப்புலியூர், நம்மையூர், புதூர் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக அருமடல் பீல்வாடி சாலையில் தனியார் கல்லூரி பஸ் மாணவ மாணவிகளை ஏற்றுக் கொண்டு இன்று காலை பெரம்பலூர் வந்து கொண்டிருந்தது. அதனை அதிவேகமாக பஸ் சென்றுக் கொண்டிருந்த போது பஸ் டிரைவது விஜய் செல்போனில் பேசியதால், கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குகள்ளானது. பஸ்சில் வந்த 50க்கும் மேற்பட்ட மாணவிகள் மாணவர்கள் அலறி கூச்சலிட்டனர். கவிழ்ந்த பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியேறினர். அங்கிருந்தவர்கள் அவர்களை மற்றொரு கல்லூரி பஸ்சில் பேருந்தில் ஏற்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பஸ் டிரைவர் விஜய் தப்பி ஓட்டம் பிடித்து தலைமறைவானார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் ,
இதில, அர்ச்சனா, சௌமியா, பிரியதர்ஷினி, பவானி, ஜெயலட்சுமி, விபத்தில் காயம் அடைந்த மாணவிகளை கல்லூரி தாளாளர் மற்றும் நிர்வாகிகள் சென்று நேரில் ஆறுதல் கூறினர். இச்சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.10.2026 - 15:21:13
Privacy-Data & cookie usage: