பெரம்பலூர்: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ; கலெக்டர் தகவல்!

schedule
2025-02-26 | 07:47h
update
2025-02-26 | 07:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Private sector employment camp; Collector information!

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நடத்தும் – மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 8.03.2025 அன்று காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை பெரம்பலூர் தண்ணீர் பந்தல் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், கலெக்டர் கிரேஸ் தலைமையில் நடைபெற உள்ளது.

 இவ்வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, காஞ்சிபுரம், ஓசூர், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, திருச்சி, மற்றும் பெரம்பலூர் பகுதிகளில் அமைந்துள்ள நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு 8-ஆம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை, ஐடிஐ, மற்றும் டிப்ளமோ, அக்ரி, நர்சிங், பார்மசி, பி.இ, பி.டெக், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், ஒட்டுநர், டெய்லர் மற்றும் ஆசிரியர் கல்வித் தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

மேலும், தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு நிறுவனத்தின் பதிவு வழிகாட்டுதல்கள், தொழில் பழகுநர் மற்றும் குறுகிய காலதிறன் பயிற்சிக்கு வழிகாட்டுதல் மற்றும் சுயதொழில் மற்றும் கடன் உதவி தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஆதார் எண், பயோடேட்டா, கல்விச்சான்றிதழ்களுடன் 08.03.2025 சனிக்கிழமை காலை 08 மணி முதல் 03 மணி வரை பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் (தண்ணீர் பந்தல்), நடைபெறும் முகாமில் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் Candidate Login–ல் தங்களது விவரங்கள் பதிவு செய்துக் கொள்ளலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்கள் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. வேலைநாடுநர்கள் வேலையளிக்கும் நிறுவனங்களுக்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு அனுமதி இலவசம். மேலும் விவரங்களுக்கு 9499055913 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.06.2026 - 16:38:58
Privacy-Data & cookie usage: