பெரம்பலூர்: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 411 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் சிவசங்கர்!

schedule
2025-09-20 | 19:36h
update
2025-09-20 | 20:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Private sector employment camp: Minister Sivashankar issued appointment orders to 411 people!

Advertisement

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் ந.மிருணாளினி, தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரியில் தொடங்கி வைத்தார்.

இம்முகாமில் 1118 ஆண்களும், 1396 பெண்களும் என மொத்தம் 2,514 நபர்கள் கலந்துகொண்டனர். இதில் 193 ஆண்களுக்கும், 218 பெண்களுக்கும் என மொத்தம் 411 பேருக்கு பணிநியமன ஆணைகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். இந்த முகாமில் இரண்டாம் கட்ட தேர்வுக்கு 476 நபர்கள் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 09:59:20
Privacy-Data & cookie usage: