Perambalur: Private sector job fair; Collector handed over appointment orders to 729 individuals!
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்திய தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை கலெக்டர் ஷரண்யா , பெரம்பலூர் எம்.எல்.ஏ கி.சிவக்குமார் முன்னிலையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் தொடங்கி வைத்தார். உள்ளூர் வெளியூரை சேர்ந்த 214 நிறுவனங்கள் கலந்து கொண்டன. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 50 ஆயிரம் வரையிலான வேலை வாய்ப்புகள் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
இம்முகாமில் 1304 ஆண்களும், 1715 பெண்களும் என மொத்தம் 3019 பேர் கலந்து கொண்டனர். இதில் 524 ஆண்களுக்கும், 205 பெண்களுக்கும் என மொத்தம் 729 நபர்கள்களுக்கு (மாற்றுத்திறனாளிகள் உட்பட) வேலைவாய்ப்புக்கான பணிநியமன ஆணைகளை கலெக்டர் ஷரண்யா வழங்கினார். இரண்டாம் கட்ட தேர்வுக்கு 2025 நபர்கள் தேர்வாகியுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது. டி.ஆர்.ஓ .கண்ணன், மகளிர் திட்ட இயக்குநர் .கோபாலகிருஷ்ணன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ) வினோத்குமார், ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி தலைவர் முனைவர்.எம்.சிவசுப்ரமணியன், செயலாளர் விவேகானந்தன், ஆண்டவர் டைல்ஸ் யோகநாதன், ஜெயராம் எஜுகேசனல் டிரஸ்ட், இந்தியன் ஆட்டோ மைபல்ஸ் விஜய் உள்ளிட்ட பல நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.