பெரம்பலூர்: ஆவின் பால் பண்ணை, ஆசிரியர், ஐடிஐ, விபத்து அவசர சிகிச்சை மையம் போன்ற பணிகள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது: வேட்பாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் பிரச்சாரத்தில் பேச்சு!

schedule
2026-04-19 | 08:14h
update
2026-04-19 | 08:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Projects such as the Aavin dairy plant, teacher training centers, ITIs, and an accident emergency treatment center were introduced during the AIADMK regime—Candidate Ilambai R. Tamilselvan stated during his election campaign.

பெரம்பலூர் தொகுதி ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் சசிக்குமார் ஏற்பாட்டில் அதிமுக வேட்பாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் நேற்று மாலை பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தார். அப்போது திருவளக்குறிச்சி பிரச்சாரத்தில் பேசியதாவது:

இரட்டை இலை சின்னத்தில் முத்திரையிட்டு வெற்றி பெறச் செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். மாலை 5 மணியிலிருந்து ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தில் எழுச்சியாக வாக்கு சேகரிக்கும் பணியினை சிறப்பாக தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கிற நம்முடைய ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தின் ஆற்றல்மிகு செயலாளர் வழக்கறிஞர் சசிகுமார் அவர்களே, இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டிருக்கிற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருமை அண்ணன் மாவட்டக் கழக பொருளாளர் பூவை தா. செழியன் அவர்களே, மாவட்ட பாரதிய ஜனதாவினுடைய தலைவர் அன்புச் சகோதரர் முத்தமிழ்செல்வன் அவர்களே, ஆலத்தூர் கிழக்கு ஒன்றியத்தின் ஆற்றல் மிகு செயலாளர் அன்பண்ணன் என்.கே. கர்ணன் அவர்களே, மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினுடைய துணைச் செயலாளர் வழக்கறிஞர் தங்கதுரை அவர்களே, தமிழ் மாநில காங்கிரஸினுடைய தலைவர் சித்தார்த்தன் அவர்களே, தமிழ்நாடு நாயுடு கூட்டமைப்பினுடைய தலைவர் ரங்கராஜு நாயுடு அவர்களே, குருமன்ஸ் கவுண்டர் கூட்டமைப்பினுடைய தலைவர் தேனூர் கிருஷ்ணன் அவர்களே, ஊராளி கவுண்டர் சமுதாயத்தின் கூட்டமைப்பினுடைய தலைவர் அன்புச் சகோதரர் அவர்களே, வருகை தந்திருக்கிற அரசியலில் அப்பழுக்கற்ற அரசியல் தலைவர் தமிழ் மாநில காங்கிரஸினுடைய தலைவர் ஐயா ஜி.கே.வாசன் அவர்களுடைய ஆதரவு பெற்ற வேட்பாளராக உங்களை நாடி உங்கள் இல்லங்களைத் தேடி இன்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.

Advertisement

இங்கே எழுச்சியான வரவேற்புரை தந்திருக்கிற இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டிருக்கிற மாவட்ட இளைஞரணி தலைவர் ஸ்டாலின் அவர்களே, மாவட்ட இளைஞரணி பொருளாளர் வேல்முருகன் அவர்களே, வருகை தந்திருக்கிற இப்பகுதியினுடைய மேற்கு ஒன்றியத்தினுடைய பொறுப்பாளர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் செயலாளர் அன்பண்ணன் வீரபாண்டியன் அவர்களே, அவரோடு இப்பகுதியினுடைய பொறுப்பாளராக இருக்கிற மாவட்ட இளைஞரணி செயலாளர் செந்தில் அவர்களே, வருகை தந்து சிறப்பித்துக் கொண்டிருக்கிற பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியினுடைய வெற்றிக் கூட்டணியினுடைய போர்ப்படை தளபதிகளே, தாய்மார்களே, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் முதற்கண் பணிவான வணக்கத்தைத் தெரிவித்து கொள்கிறேன்

“உங்கள் ஒவ்வொருவரின் பெயரையும் என்னால் ஏ.பி. சிவராஜ் முதல் அத்தனை பேரையும் என்னால் பெயரிட்டு அழைக்க முடியும் என்றாலும், காலத்தின் அருமை கருதி உங்கள் ஒவ்வொருவரின் பெயரையும் நான் அழைத்ததாக ஏற்றுக் கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

தேர்தல் களத்திலே எம்.எல்.ஏ ஒரு வேலைக்காரனைப் போல உங்களிடத்தில் இரண்டறக் கலந்து உங்கள் வீட்டுப் பிள்ளையாய் நடந்து கொண்ட காரணத்தினால் உங்கள் அத்தனை பேரிடும் இணக்கமாகக் கலந்து கொண்டிருக்கிறேன். பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நம்முடைய திருவளக்குறிச்சி பகுதிக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது பணியாற்றி கொண்டு வந்திருக்கிறேன். மீண்டும் என்னை சட்டமன்ற உறுப்பினராக்குகிற போது இந்த ஊரில் அதிகமான உப்பு நீராக இருக்கிறது. அதனால் கிட்னி ஸ்டோன் போன்ற பிரச்சனை ஏற்படுவதாக அறிகிறேன். நான் சட்டமன்ற உறுப்பினருடன் பெரிய அளவில் ஆர்.ஓ (RO) தண்ணீரைச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை உங்களுக்கு வழங்குவேன் வழங்குவேன் என்ற உத்தரவாதத்தை வழங்கி வாக்களிப்பீர்! வெற்றி பெறச் செய்வீர்! இந்தப் பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதி. தமிழ்நாட்டின் முதலமைச்சராய் விவசாயி எடப்பாடியாரை ஆக்குகிற போது விவசாயக் கடன் ரத்து செய்யப்படும். இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று பாதம் பணிந்து கேட்டு நன்றியோடு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம் என பேசினார்.

முன்னதாக பாடாலூர் பிரச்சாரத்தில், அதிமுக ஆட்சிக் காலத்தில், பாடாலூரில், ரூ. 38 கோடியில் ஆவின் பால் பண்ணை, ஆசிரியர், ஐடிஐ, விபத்து அவசர சிகிச்சை மையம் முன்னேற்பாட்டு பணிகள், பொதுபயன்பாட்டு மையத்தில் 300 க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். ஜவுளி பூங்கா உள்ளிட்ட திட்டங்கள் முன்னெடுக்கபட்டு செயல்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.கே. கர்ணன், பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் செல்வராஜ், பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் உமாஹைமாவதி, உள்பட ஆலத்தூர் ஒன்றிய பொறுப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு பாடாலூர், ஊத்தங்கால், திருவளக்குறிச்சி, இரூர், ஆலத்தூர், நாரணமங்கலம், விஜயகோபாலபுரம், நாட்டர்மங்கலம், மருதடி, கூத்தனூர், செட்டிக்குளம் பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். வேட்டுகள் முழங்க வரவேற்பும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் வெற்றி திலகமிட்டு வாழ்த்தினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 08:24:16
Privacy-Data & cookie usage: