பெரம்பலூர்: CNG ஆட்டோ பர்மிட்டை அதிக விலைக்கு விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கண்டன் ஆர்ப்பாட்டம்!

schedule
2025-04-19 | 20:20h
update
2025-04-19 | 20:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Protest demanding action against those who sold CNG auto permits at high prices!

Advertisement

பெரம்பலூர் 3+1 ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் காந்தி சிலை முன்பு, மாவட்டத் தலைவர் எஸ். கிருஷ்ணகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தது. கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்கள் ஆட்டோ சம்மேளனம் பொதுச்செயலாளர் சிவாஜி, ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் ரெங்கநாதன், சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் அகஸ்டின் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில், பெரம்பலூர் நகரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் சி.என்.ஜி, ஆட்டோக்களுக்கு புதிய அனுமதிச்சீட்டு வழங்க கூடாது என கலெக்டரிடம் மனு கொடுத்ததற்காக சி.ஐ.டி.யூ சங்கத்தை சேர்ந்தவர்களை மிரட்டி, அசிங்கமாக பேசியவர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கவும், ஏற்கனவே இயங்கி வரும் ஆட்டோக்களை சி.என்.ஜி-யாஆக மாற்ற அரசு மானியம் வழங்க வேண்டும், ஆன்லைன் அபராதத்திலிருந்து ஆட்டோக்களுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் முழக்க மிட்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.06.2026 - 04:28:47
Privacy-Data & cookie usage: