பெரம்பலூர்: திமுக அரசைக் கண்டித்து, தே.ஜ.கூ. கட்சிகளின் சார்பில் அதிமுக தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

schedule
2026-03-17 | 09:01h
update
2026-03-17 | 09:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Protest Demonstration Led by AIADMK on Behalf of NDA Parties, Condemning the DMK Government!

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் அதிமுக தலைமையில் தமிழகத்தை மீட்போம் என்ற கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் இளம்பை இரா தமிழ்ச்செல்வன் தலைமையில் நடந்தது.

திமுக அரசை கண்டித்தும், தூத்துக்குடி விளாத்திக்குளத்தில் சிறுமி சீரழிக்கப்பட்டதை கண்டுபிடிக்காத காவல்துறையையும் கண்டித்தும், பல்வேறு குறைகளை தெரிவித்தும் கண்டன கோசங்கள் ஆர்பாட்டத்தில் எழுப்பப்பட்டது.

Advertisement

அதிமுக நகர செயலாளர் ராஜபூபதி வரவேற்றார். அதிமுக அவைத் தலைவர் குன்னம் குணசீலன், முன்னாள் துணை சபாநாயகர் ஆ.அருணாசலம், முன்னாள் எம்.பிக்கள் சந்திரகாசி, மருதைராஜா, கூட்டணி கட்சிகளை சேர்ந்த பாமக மாவட்ட செயலாளர் செந்தில்குமார், அமமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் சித்தார்த்தன், தமாகா மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ண ஜனார்த்தனன், நாட்டார்மங்கலம் ஜெயராமன், பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் உமாஹைமாவதி, ஐஜேகே பெரம்பலூர் நகர செயலாளர் ஆர்.சி.ஆர் ராமலிங்கம், பாமக பொதுக்குழு உறுப்பினர் கண்ணபிரான், பாஜக கோட்ட பொறுப்பாளர் சிவசுப்பிரமணியன், பாஜக மாவட்ட தலைவர் முத்தமிழ்ச்செல்வன், அதிமுக பிரமுகர் சித்தளி நாகராஜன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம், ரவிச்சந்திரன், சசிக்குமார், ராஜேந்திரன், செல்வமணி, புஷ்பராஜ், ஐஜேகே மாவட்ட தலைவர்கள் அன்பழகன், அழகுதுரை, முன்னாள் எம்எல்ஏ பூவை.செழியன், கலை இலக்கிய அணி சந்திரகாசன், குரும்பாபாளையம் சி.நாகராஜன், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் வேல்முருகன், கவுல்பாளையம் கலையரசன், பாஜக முன்னாள் பெரம்பலூர் மாவட்ட தலைவர் செல்வராஜ், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள், எசனை, கீழக்கரை பன்னீர் செல்வம் உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள், பல்வேறு அணியினர், மகளிர் அணியினர் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2026 - 16:45:43
Privacy-Data & cookie usage: