பெரம்பலூர்: Online மருந்து வணிகத்தை கண்டித்து, நாளை மருந்து கடைகளை அடைத்து போராட்டம்! தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் அறிவிப்பு!!

schedule
2026-05-19 | 09:10h
update
2026-05-19 | 09:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Protest tomorrow—pharmacies to remain closed in condemnation of online medicine sales! Announcement by the Tamil Nadu Pharmaceutical Traders Association.

நாளை நாடு முழுவதும் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் சார்பில் மருந்து கடைகள் கடை அடைப்பு செய்து போராட்டம் நடத்த உள்ளதாக சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மருந்து விற்பனையை நிறுத்தவும், வலி நிவாரணி & தூக்க மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி அடிமையாகும் இளம் தலைமுறையை காக்கவும், உயிர்காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்களையும், தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்திடவும்,

Advertisement

போலி மருந்துகளின் விற்பனையை தடுக்க கோரியும், ஆன்லைன் மூலம் வாங்கப்படும் கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும், கலாச்சார சீரழிவையும் தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி நாளை மே.20 ந்தேதி புதன்கிழமை நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக அச்சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் ரமேஷ் தெரிவித்துள்ளார். முக்கிய மருந்துகளை முன்கூட்டியே இன்றே வாங்கி வைத்துக் கொள்ளவும் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.05.2026 - 09:28:26
Privacy-Data & cookie usage: