பெரம்பலூர்: பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க, துணை போகும் அ.தி.மு.க.வை கண்டித்து, 4 இடங்களில் ஆர்ப்பாட்டம்! மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கை!

schedule
2026-02-10 | 15:15h
update
2026-02-10 | 15:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Protests at 4 places condemning BJP, which cheated Tamil Nadu in the budget, and AIADMK, which will support it! Statement by District DMK in-charge V. Jagatheesan!

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க.வையும், அதற்கு ஒத்து ஊதி துணை போகும் அ.தி.மு.க.வையும் கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் பிப்ரவரி 12- வியாழக்கிழமை அன்று பெரம்பலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தாவது:

மத்திய பா.ஜ.க. அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ரூ.3458 கோடி , 100 நாள் வேலை திட்ட நிதி
ரூ.2000 கோடி, குடிநீர் இணைப்பு திட்ட நிதி ரூ.3112 கோடி உள்ளிட்ட எந்த நிதியையும் விடுவிக்காமலும், வளர்ச்சி திட்டத்திற்கு ஒரு பைசா கூட ஒதுக்காமலும், தமிழ்நாட்டு மக்களை புறக்கணித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. தமிழ்நாட்டிற்கான நிதியும் இல்லை, வளர்ச்சி திட்டமும் இல்லை என மத்திய அரசு கை விரித்த போதும் அவர்களது காலில் விழுந்து ஆதரித்துள்ளது அ.தி.மு.க.

Advertisement

நிதி மறுப்பு ஒரு புறம் என்றால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டத்தை சிதைத்து, 100 நாள் வேலையையே இனி இல்லாமல் செய்து கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அளிக்கும் சட்டத்தை திரும்ப பெறவோ, அதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவோ செய்யாமல் ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்துள்ளது ஒன்றே பா.ஜ.க. அரசு, அதோடு அமெரிக்காவின் விவசாயம் சார்ந்த பொருட்களை இங்கே இறக்குமதி செய்து விற்க ஒப்புக்கொண்டு நமது விவசாயிகளின் வாழ்வையையே கேள்விக்குறியாக்கியுள்ளது மத்திய பா.ஜ.க. அரசு.

ஒரே நேரத்தில் 100 நாள் வேலை ஒழிப்பு சட்டம், விவசாயத்தை அழிக்கும் ஒப்பந்தம் என கிராமப்புற மக்கள் மீது இரட்டை அணுகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இதற்கு உறுதுணையாக இருந்து துரோகம் செய்து வருகிறது அ.தி.மு.க.

நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம், புதுப்புது சட்டங்கள், ஒப்பந்தங்கள் வழியே மக்களை வஞ்சிப்பது, நம் வளர்ச்சியைத்தடுத்து வீழ்ச்சியில் தள்ள துடிப்பது என அநீதி இளைத்து வரும் ஒன்றிய பா.ஜ.க. வை எதிர்த்தும், அதோடு கூட்டு சேர்ந்து டப்பா எஞ்சின் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் டெல்லியின் அடிமையாக்கத் துடிக்கும் அடிமை அ.தி.மு.க. வைக் கண்டித்தும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை அருகில் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் (எனது) தலைமையிலும், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்
எம். பிரபாகரன் முன்னிலையிலும்,

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, ஆலத்தூர் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன் தலைமையிலும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் செ.நல்லதம்பி, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ந.ஜெகதீஷ்வரன் தலைமையிலும், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வேப்பூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் தி.மதியழகன், வேப்பூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சி.ராஜேந்திரன், வேப்பூர் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் அழகு. நீலமேகம் ஆகியோரது தலைமையிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் 4 இடங்களில்
நடக்க உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், இந்திய தேசிய காங்கிரஸ்,ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடது கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து தோழமை கட்சி நிர்வாகிகள்,மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர,பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், முன்னாள், இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கிளை,வார்டு கழகச் செயலாளர்கள், கழகத் தோழர்கள், தோழமை கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2026 - 15:50:00
Privacy-Data & cookie usage: