Perambalur: Public attempts road blockade to protest against the parking of private ambulances!
பெரம்பலூர் ஆலம்பாடி சாலையில் உள்ள, சமத்துவபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக தனியார் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்த போலீசார், நடவடிக்கை இல்லை என்றால் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக தகவல் .பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பகுதி அருகே, ஆலம்பாடி சாலை பகுதியில் சமத்துவபுரம் உள்ளது, இதில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் மேலும் ஆலம்பாடி சாலையிலும் குடியிருப்பு பகுதியில் உள்ளது, இந்நிலையில் சமத்துவபுரம் அருகே இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சமுதாயக்கூடம், பொது கழிவறை உள்ள பகுதியில், திடீரென தனியார் ஆம்புலன்ஸ்கள் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி உள்ளனர்,இதானால் அப்பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துஅப்பகுதி பொதுமக்கள் இன்று இரவு 8 மணி அளவில் பெரம்பலூர் – துறையூர் சாலையில் ,சாலை மறியலில் ஈடுபட முயன்றனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, தகவல் தெரிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது வட்டாட்சியர் அனுமதி கொடு வாகனங்கள் நிறுத்தப்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து,சம்பவ இடத்திற்கு வட்டாட்சியர் வரவழைக்க செய்தனர், சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொது மக்களிடம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசித்து நாளை வானங்கள் வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து சாலை மறியல் முடிவை கைவிட்டு சென்றனர்.இது குறித்து அப்போது பொதுமக்கள் தெரிவிக்கும் பொழுது தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு, அரசு அதிகாரிகள் முக்கியத்துவம் அளிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது,இப்பொழுதில் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளை நலன் கருதி அப்பகுதியில் ஆம்புலன்ஸ் நிறுத்தக்கூடாது என்றும், இதற்கு நடவடிக்கை இல்லை என்றால் நாங்கள் மறியல் போராட்டத்தை முன்னெடுப்பதாக எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.மேலும் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் போக்குவரத்து அதிகம் உள்ள அப்பகுதியில் மின்விளக்கு வசதியும் இல்லாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.