பெரம்பலூர்: 100 நாள் வேலை வழங்க கோரி யூனியன் ஆபீஸ் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்!

schedule
2026-02-12 | 17:54h
update
2026-02-12 | 17:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Public blockades road in front of union office demanding 100 days of work!

பெரம்பலூர் மாவட்டம், வடக்கலூர் அகரம் கிராம மக்கள் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்க கோரி வேப்பூர் யூனியன் ஆபீஸ் முன்பு சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

Advertisement

வடக்கலூர் ஊராட்சிக்கு உட்பட்ட அகரம் கிராம மக்களுக்கு கடந்த 2025 ஆம் ஆண்டு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 7 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து? வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோரிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்த பொதுமக்கள், இதையடுத்து இன்று மதியம் பிடிஓ-வை சந்திக்க வேப்பூர் யூனியன் ஆபீசிற்கு சுமார் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்தனர். ஆனால், அப்போது அங்கு பிடிஓ இல்லாததால், ஆத்திரமடைந்த மக்கள் வேப்பூர் – குன்னம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த100 நாள் வேலை வாய்ப்பு திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆண்டாள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடைந்த கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் வேப்பூர் – குன்னம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.05.2026 - 13:35:45
Privacy-Data & cookie usage: