பெரம்பலூர்: வீட்டினுள் நுழைந்த திருடனை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்!

schedule
2026-06-30 | 17:44h
update
2026-06-30 | 17:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Public catch a thief red-handed after he entered a house and hand him over to the police!

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் அருகே சிறுவயலூர் கிராமத்தில் வீட்டில் திருட முயன்றதாகக் கூறப்படும் இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். நேற்று மதியம் சிறுவயலூரைச் சேர்ந்த பழனிச்சாமி (55) என்பவர் வயலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியபோது, தனது வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் இருப்பதைக் கண்டு சந்தேகமடைந்தார். உடனே பொதுமக்களின் உதவியுடன் அந்த நபரை மடக்கிப் பிடித்து பாடாலூர் போலீசுக்கு தகவல் அளித்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், பிடிபட்டவர் களரம்பட்டியைச் சேர்ந்த கண்ணன் மகன் மாரிமுத்து (29) என்பதும், வீட்டிற்குள் புகுந்து திருட முயன்றதும் தெரியவந்தது. மேலும், இவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.06.2026 - 18:06:51
Privacy-Data & cookie usage: