பெரம்பலூர்: நகரில் குடியிருப்பு பகுதியில் இயங்கும் தனியார் கேஸ் சிலிண்டர் குடோனை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை!

schedule
2026-08-22 | 14:31h
update
2026-08-22 | 14:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Public demand relocation of a private gas cylinder godown operating in a residential area of ​​the town!

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள சுந்தர் நகரில் தனியாருக்கு சொந்தமான கேஸ் குடோன் அதிகளவில் மக்கள் குடியிருப்பு உள்ள பகுதியில் மத்தியில் உள்ளது. இந்த கேஸ் குடோனில் இருந்து கசியும் வாயுக்கள் அவ்வப்போது சுற்றி இருக்கும் குடியிருப்புகளை வசிக்கும் மக்களுக்கு தொந்தரவாக இருந்தாலும், சமீபத்தில் ஆக. 11 அன்று பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் அருணாசலம் என்பவருக்கு சொந்தமான டீக்கடையில் ஒரு சிலிண்டர் வெடித்து விபத்தாகியதில் 7 பேர் பலியான நிலையில் 9 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தனியாருக்கு சொந்தமான கேஸ் குடோனில் வீடு மற்றும் கடைகளுக்கு சப்ளை செய்யும் கேஸ் சிலிண்டர்களுடன் உள்ளது. பொதுமக்கள் மருத்துவமனை வணிக வளாகங்கள் பெட்ரோல் பங்குகள் சுற்றியுள்ள நடுப்பகுதியில் இயங்கி வருகிறது. குடியிருப்பு வாசிகள் தங்கள் பாதுகாப்பு கருதி கேஸ் குடோனை இடமாற்றம் செய்ய கோரி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், தற்போது காமராஜர் வளைவு அருகில் தீ விபத்து நடந்த பிறகாவது கேஸ் குடோனை பெரம்பலூர் புறநகர பகுதிக்கு மாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.08.2026 - 14:45:17
Privacy-Data & cookie usage: