Perambalur: Public demands speed bumps to be installed on Esanai Division Road!
பெரம்பலூர் அருகே உள்ள எசனை – கீழக்கரை ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊர்களுக்கு பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் இரண்டு இடங்களில் முக்கிய இணைப்பு சாலை உள்ளது. நாள்தோறும் இந்த சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அவைகள் பெரம்பலூர் முதல் சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பதி, பெங்களூர், கோவா, மும்பை போன்ற ஊர்களுக்கு செல்லும் முக்கிய சாலையாகவும், சேலம் மார்க்கத்தில் இருந்து பெரம்பலூர், அரியலூர், கங்கை கொண்ட சோழபுரம், அனைக்கரை, கும்பகோணம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையாக உள்ளது. தற்போது புதிய தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதால், எசனை – கீழக்கரை, சென்று வரும் மக்கள் சாலையில் மாறிச் செல்ல பெரும் சிரமப்படுகின்றனர். எதிர்வரும் வாகனங்கள் அதிகவேகமாக வருவதால் சாலையை கடக்க அருகே உள்ள பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், முதியவர்கள், பெண்கள் பெரும் சிரமமப்படுகின்றனர். விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது. அப்பகுதியில் சாலையை கடக்கும் வகையில் நெடுஞ்சாலைதுறையினர் புதிதாக வேகத் தடை அமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.