பெரம்பலூர்: உணவுப் பொருள் வழங்கல் தொடர்பான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்: கலெக்டர் தகவல்!

schedule
2026-02-12 | 14:48h
update
2026-02-12 | 14:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Public grievance redressal camp regarding food supply: Collector’s information!

பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம், பெரம்பலூர் வட்டம், கவுல்பாளையம் கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், பாண்டகபாடி கிராமத்தில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், குன்னம் வட்டம், பெண்ணக்கோணம் (தெற்கு) கிராமத்தில் வருவாய் கோட்டாட்சியர் அனிதா தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் கிராமத்தில், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தலைமையிலும் 14.02.2026 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது.

Advertisement

மேற்படி முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான, குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2026 - 21:33:27
Privacy-Data & cookie usage: