பெரம்பலூர்: உணவுப் பொருள் வழங்கல் சம்மந்தமான பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம்; கலெக்டர் தகவல்!

schedule
2024-12-10 | 13:20h
update
2024-12-10 | 13:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Public grievance redressal camp regarding food supply; Collector’s information!

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம், பெரம்பலூர் வட்டம், புதுநடுவலூர் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், அனுக்கூர் கிராமத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும், குன்னம் வட்டம், சித்தளி(மேற்கு) கிராமத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் தலைமையிலும். ஆலத்தூர் வட்டம், சிறுகன்பூர் (மேற்கு) கிராமத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும் 14.12.2024 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான, குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு கலெக்டர் கிரேஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.08.2026 - 17:51:04
Privacy-Data & cookie usage: