பெரம்பலூர்: தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம்; எம்.எல்.ஏ சிவக்குமார் தலைமையில் நடந்தது!

schedule
2026-08-24 | 17:56h
update
2026-08-24 | 17:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Public meeting highlighting the TVK government’s 100-day achievements; held under the leadership of MLA Sivakumar!

பெரம்பலூரில், மாவட்ட தவெக சார்பில் தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை, மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான சிவக்குமார் தலைமையில் நடந்தது. அப்போது, அவர் பேசியதாவது: தவெக ஆட்சியில் தமிழகம் முழுவதும் எந்த பகுதியிலும் ஊழல் மற்றும் லஞ்சம் இல்லாத ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதும், மேலும் தனது ஆட்சியில் எந்த ஊழலும் நடைபெறாவண்ணம் பார்த்துக் கொண்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு சேர்ப்பது தான் முதல்வர் விஜய்யின் குறிக்கோளாகும். மேலும், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை ஒழித்ததுடன், பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகம் வென்று உள்ளது. லஞசம், ஊழல் செய்வோர் அஞ்சுகின்றனர், வரும் உள்ளாட்சி தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட்டு அனைத்து உள்ளாட்சி பொறுப்புகளையும் நாம் வெற்றி பெற்று நமது முதலமைச்சரின் சீரிய ஆட்சிக்கு ஒரு அடையாளமாக அவரிடம் கொண்டு சேர்ப்போம் என்றார். முன்னதாக பணம் யார் கொடுத்தாலும் வாங்கி கொண்டு விசில் சின்னத்திற்கு வாக்களிக்க செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Advertisement

முன்னாள் எம்எம்ஏ தமிழ்செல்வன், மாவட்ட இணை செயலாளர் ரேகா, மாவட்ட துணை செயலாளர்கள் ஈஸ்வரன், சசிகுமார், மாவட்ட பொருளாளர் முத்தமிழ் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் புருஷோத்தமன், சின்னதுரை, ராமகிருஷ்ணன், மணிகண்டன், புஷ்பராஜ், தர்மேந்திரன், பேரூர் செயலாளர்கள் கணேசன், விஷ்ணு, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பேபிகாமராஜ், அயிலூர் விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பெரம்பலூர் நகர செயலாளர் விஜய் வரவேற்றார். பெரம்பலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வினோத் நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.08.2026 - 18:23:18
Privacy-Data & cookie usage: