பெரம்பலூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்! மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கை!

schedule
2025-04-18 | 17:22h
update
2025-04-18 | 17:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Public meeting on the birthday of Chief Minister M.K. Stalin! Statement by District DMK in-charge V. Jagatheesan!

பெரம்பலூர் நகர தி.மு.க.சார்பில், நகர செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான எம்.பிரபாகரன் தலைமையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம், புதிய பேருந்து நிலையத்தில் நாளை மாலை 6.00 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி என்.சிவா. எம்.பி., போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றுகின்றனர்.

Advertisement

பெரம்பலூர் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு, 6-ஆவது வார்டு திமுக செயலாளர் ஜே.எஸ்.ஆர்.கருணாநிதி வரவேற்பு உரையாற்றுகிறார். நகர அவைத்தலைவர் கோ.ரெங்கராஜ், நகர துணைச் செயலாளர்கள் நூ.சபியுல்லா, ஆர்.ரெங்கநாதன், கல்பனா முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.ஆர்.ராஜேந்திரன், கே.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்த கூட்டத்தில், கழக துணைப் பொதுச்செயலாளர்- நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் – மாநிலங்களவை கழக குழுத் தலைவர் திருச்சி என்.சிவா.எம்.பி., போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கே.என்.அருண்நேரு.எம்.பி., மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றுகின்றனர்.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன், குன்னம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஏ.கே.அருண் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். நகர பொருளாளர் முகமது அசாருதீன் நன்றி உரையாற்றுகிறார்.


இதில் மாநில,மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், முன்னாள், இந்நாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வார்டு, கிளைக் கழக செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.06.2026 - 19:31:59
Privacy-Data & cookie usage: