பெரம்பலூர்: தார் பிளாண்டை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல் போராட்டம்!

schedule
2026-02-28 | 18:15h
update
2026-02-28 | 18:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Public protest against tar plant, block roads!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள புதுக்குறிச்சி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தார் பிளாண்ட் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இதில் வெளிவரும் புகை மற்றும் மாசுக்கள் கலந்த வாயுக்களால் சுற்றுச் சூழல் சீர்கேடும், கால்நடைகள், விவசாய விளைநிலங்களும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியடைந்த கிராம மக்கள் இன்று காலை புதுக்குறிச்சி கிராமத்தில் ஆலத்தூர்-கொளக்காநத்தம் செல்லும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு அரசு பேருந்தை கிராம பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் ஆலத்தூர் தாசில்தார் முத்துக்குமரனுக்கு பேச்சு வார்த்தை நடத்தி, விரைவில் தார் பிளாண்ட் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அவர் அளித்த உறுதியின் பேரில், போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். இதன் பின்னர் ஆலத்தூர் – கொளக்காநத்தம் சாலையில் போக்குவரத்து சீரானது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2026 - 05:41:24
Privacy-Data & cookie usage: