Perambalur: Public protest against the TVK government—citizens expressed their opposition by displaying black flags on their homes and in the streets!
பெரம்பலூர் அருகே குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 2 வார்டில் உள்ள ஜெகஜுவன்ராம் தெரு, அண்ணா நகர் வடக்குத் தெரு பகுதியில் வசிக்கும் அருந்தியர் சமூக இன மக்க கடந்த பல புறக்கணக்கபட்டு வந்ததாகவும், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பும் அந்த வார்டில் பொதுமக்களுக்கு போதுமான வசதிகளை கடந்த கால அரசுகளும், தற்போதைய அரசுகளும் செய்து தர மறுப்பதை கண்டித்தும், குரும்பலூர் பேரூராட்சி, பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், தற்போதை தவெக தலைமையிலாக தவெக அரசைக் கண்டித்தும் இன்று காலை அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளிலும், தெருக்களிலும் கருப்பு கொடிக்களை கட்டி பறக்க விட்டு ஆர்பாட்டம் நடத்தி எதிர்ப்பை தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தாசில்தார் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அத்துடன் குடிநீர் பகிர்மான குழாய்கள் பதிக்கும் பணிகள் முடிவுற்றவுடன் சாலைகள் மற்றும் வடிகால்கள் ஆறு மாத காலத்திற்குள் அமைத்துதரப்படும் எனவும், இடுகாடு சுற்றுச்சுவர் நில அளவை செய்து மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை மூலம் நிதி பெற்று செய்து கொடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது மற்றும் பேரூராட்சி மூலம் தெரு மின் விளக்குகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அருந்ததியர்களுக்கான தனி சமுதாயக்கூடம் அமைப்பதற்கான இடம் பொதுமக்காளல் தேர்வு செய்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இடம் தேர்வு செய்த பின் அளவீடு செய்து அரசு மூலம் நிர்வாக அனுமதி பெற்று இப்பணிகள் செய்துக் கொடுக்கப்படும் எனவும், கொசு மருந்து வாரந்தோறும் ஒரு முறை அடித்துக்கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. காவிரி நீர் வரத்து அடிப்படையில் ஜந்து தினங்களுக்கு ஒரு முறை காவிரி குடிநீர் கொடுக்கப்படும் என பேரூராட்சி மூலம் தெரிவிக்கப்பட்டது.
நிர்வாக அனுமதி பெறப்பட்ட பணிகள் பத்து நாட்களுக்குள் இப்பேரூராட்சியால் துவங்கப்பட்டு பணிகள் முடித்து கொடுக்கப்பட்டும் சிமெண்ட் பாலத்தின் மீது சிமெண்ட் தளம் அமைத்து கைப்பிடி வைத்து தரப்படும் எனவும் பேரூராட்சி செயல் அலுவலர் உறுதி அளித்தார். அதன் பின்னர் போராட்டத்தை விலக்கி கொண்டனர். இதனால் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.