பெரம்பலூர்: அகரம்சீகூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்; மாவட்ட நிர்வாகம் தகவல்!

schedule
2025-04-01 | 10:02h
update
2025-04-01 | 10:02h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Public relations project camp in Agaramseegur village; District administration informed!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம்சீகூர் கிராமத்தில், வரும் ஏப்.9 (புதன்கிழமை) அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இதர தேவைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே, அகரம்சீகூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அகரம்சீகூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் முகாம் நடைபெறும் நாளிற்கு முன்னதாகவே அல்லது தொடர்புடைய வருவாய்த்துறை அலுவலர்களிடம் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.06.2026 - 04:41:54
Privacy-Data & cookie usage: